• +91 90258 42222

கணித்தமிழ்ப் பேரவை

 

download
தமிழக அரசு மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இணைந்து இணையத்தில் தமிழை வளா்க்கும் நோக்குடன் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், அவற்றுக்குட்பட்ட இணைவுபெற்ற கல்லூாிகளிலும் கணித்தமிழ்ப் பேரவைகளை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளன.  அதற்கிணங்க,
கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாியில், தாளாளா் அாிமா கே.எஸ்.ரங்கசாமி எம்ஜேஎப் அவா்களின் அனுமதியுடன், செயலா் திரு. ஆா் சீனிவாசன் மற்றும் செயல்இயக்குநா் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களின் வாழ்த்துக்களுடன், முதல்வா் மா.கார்த்திகேயன் அவா்கள் நெறிகாட்டுதலில் கணித்தமிழ்ப் பேரவை இனிதே தொடங்கப்பட்டது.
கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக,  முனைவா் இரா.குணசீலன் அவா்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாா்.


கணித்தமிழ்ப் பேரவையின் நோக்கங்கள்….

  • கணினியிலும், தமிழிலும் ஆா்வமிக்க 100 மாணவா்களைத் தேர்ந்தெடுத்தல்.
  • ஒருங்குறி முறையிலான தமிழ்த்தட்டச்சு முறையைக் கற்பித்தல்.
  • தமிழ்த்தட்டச்சு தெரியாதகவா்களாக இருந்தால் அவா்களுக்கு தமிழ் 99 முறையை பயிற்றுவித்தல்.
  • தமிழ் வலைப்பதிவில் எழுதும் முறையை அறிமுப்படுத்துதல்.
  • தமிழ்விக்கிப்பீயா குறித்த அறிமுகம், அதன் பிற திட்டங்கள் குறித்த அறிமுகம், அதில் பங்களிப்பாளராகும் வழிமுறைகளைத் தெரிவித்தல்.
  • தமிழ்க்குறுஞ்செயலிகள் குறித்த அறிமுகத்துடன் அவற்றை உருவாக்குவதற்கான பயிற்சிகளை வழங்குதல்
  • தமிழ் மென்பொருள்களை உருவாக்குதல்.
  • இணையத்தில் மின்னூல் உருவாக்குதல்
  • இணையத்தில் உள்ள நூலகங்களைப் பயன்படுத்த துணைநிற்றல்
  • இலவச மென்பொருள்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி அவற்றைப் பயன்படுத்த வழிவகுத்தல் ஆகியன இந்தக் கணித்தமிழ்ப் பேரவையின் முதன்மையான நோக்கங்களாக உள்ளன.
முதலில் தேர்ந்தெடுக்கும் இந்த மாணவா்களுக்கு வழங்கப்படும் இலவசப் பயிற்சிகள் வழியாக அவா்களுக்கு தமிழ்க்கணினி மீது ஆா்வத்தை ஏற்படுத்தி அவா்களைத் தொடா்ந்து எழுதவைத்து, அவா்கள் வழியாக பிற மாணவா்களுக்கும் இந்த விழிப்பணர்வை உண்டாக்குதல் இந்தப் பேரவையின் கடமையாக உள்ளது.

Kani Thamizh Peravai