27 Jul

  • By ksrcasw
  • In News
  • Comments Off

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் Dr. A.P.J அப்துல்கலாம் அவர்களின்

நினைவு தினம் அனுசரிப்பு

27.07.2018 அன்று கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் Dr. A.P.J அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் கல்லூரியின் தாளாளர் கே.எஸ்.ரங்கசாமி MJF, துணைத் தாளாளர் திரு. R சீனிவாசன், செயல் இயக்குனர் திருமதி கவிதா சீனிவாசன் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா. கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மறைந்த அப்துல்கலாம் ஐயா அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் இரா. குணசீலன் அவர்கள் மறைந்த கலாம் அவர்களின் வாழ்க்கை தத்துவத்தை மாணவிகளுக்கு செங்குறுதி தூண்டும் வகையில் பேசினார். அதனைத் தொடர்ந்து பலதுறைச்சார்ந்த் கல்லூரி மாணவிகள் “காலமின் கனா காணும் காலங்கள்” என்ற தலைப்பில் தங்களுடைய கதை மற்றும் கவிதையினை கூறினர். கூட்டத்தின் நிறைவாக வணிகக்கணினிப் பயன்பாட்டியல் துறைத்தலைவர் திரு. ஓ. ஓபுளிக்கிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை கூறினார்.